
- தெலங்காணா சித்திபேட்ட மாவட்டம் துப்பாக்க உப தேர்தல் பரபரப்பு.
- ரகுநந்தன் உறவினர்கள் வீடுகளில் சோதனைகள்.
துப்பாக்க பை எலக்சன் பின்னணியில் ரெவின்யூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரகுநந்தன் ராவின் மாமா ராம் கோபால் ராவு மற்றும் ஒரு உறவினர் அஞ்சன்ராவு வீடுகளில் அதிகாரிகள் திங்களன்று சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த சோதனைகளில் அஞ்சன் ராவு வீட்டில் அதிகாரிகள் ரூ 18.67 லட்சம் கைப்பற்றினர்.
இந்த சோதனைகள் குறித்த செய்தி அறிந்த பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவு, அஞ்சன்ராவின் வீட்டுக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும் பிஜேபி நிர்வாகிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளில் ரகுநந்தன் மயங்கி கீழே விழுந்தார்.
அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை சிலவற்றை பிஜேபி ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தற்போது அங்கு பரபரப்பு தொடர்கின்றது. மறுபுறம் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சித்தி பேட்டை முனிசிபல் சேர்மன் ராஜநர்சு வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.
துப்பாக்க உப தேர்தலில் டிஆர்எஸ் தோற்றுப் போவது நிச்சயம் என்று தீர்மானித்த அமைச்சர் ஹரீஷ் ராவு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார் என்று பிஜேபி குற்றம் சாட்டுகிறது.
பிஜேபி வேட்பாளர் ரகுநந்தன் ராவை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் எப்படிப்பட்ட போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்காமல்…. அமைச்சர் உத்தரவுபடி ரகுநந்தன் ராவு வீட்டிலும் அவருடைய உறவினர்கள் வீட்டிலும் அவர்களுடைய அலுவலகங்களிலும் சோதனை என்ற பெயரில் தாக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் போலீசார் ரகுநந்தன் ராவு குடும்பத்தினரையும் உறவினர் களையும் பயத்திற்கும் கவலைக்கும் உட்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஒருபுறம் துப்பாக்க தொகுதியில் ரகுநந்தன் ராவை பிரசாரம் செய்ய விடாமல் போலீசாரோடு வந்து வீடுகளின் மீது தாக்குதல் செய்து வருகிறார்கள் டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள். மறுபுறம் துப்பாக்க வில் இஷ்டம் வந்தாற்போல் பணமும் மதுவும் விநியோகித்து வருகிறார்கள்.
போலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.