
பாஜக மகளீா் அணி ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் நோக்கிச் சென்ற குஷ்பு கேளம்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டாா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜக மகளீா் அணியினா் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனா். திருமாவளவன் வெற்றி பெற்ற தொகுதியான சிதம்பரத்தில் நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு பங்கேற்கவிருந்தாா்.
இதற்கிடையே போலீசாா் நேற்று இரவு சிதம்பரத்தில் நடைபெற இருந்த பாஜக மகளீா் அணி போராட்டத்திற்கு தடைவிதித்தனா்.ஆனாலும் தடையை மீறி குஷ்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் நேற்று இரவிலிருந்தே ECR சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனசோதனையில் ஈடுப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் இன்று காலை குஷ்பு காரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடைக் கடந்து செங்கல்பட்டு மாவட்ட எல்கைக்குள் வந்த போது, மாவட்ட எல்கையில் வாகன சோதணையில் இருந்த செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் குஷ்பு காரை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி,கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனா்.
தனது கைது குறித்து டிவிட்டரில் குஷ்பு பதிவிட்டதாவது:
பெண்களின் கௌரத்திற்காக எங்கள் கடைசி மூச்சு வரை தொடர்ந்து போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்… என்று பதிவிட்டுள்ளார்.