நாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்!

Published:

nayini-narasimma-reddy-wife-ahalya
nayini-narasimma-reddy-wife-ahalya

நாயினி நரசிம்மா ரெட்டியின் மனைவியும் காலமானார். அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் நாயினி நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தில் மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. அவர் மனைவி அகல்யா (68) உடல்நலம் குன்றியதால் காலமானார்.

நாயினி நரசிம்மா ரெட்டியோடு கூட அவர் மனைவிக்கும் கொரோனா தாக்கியது. ஆனால் அதன்பின் அவருக்கு நெகட்டிவ் வந்தாலும் நுரையீரலில் இன்பெக்சன் பரவியதால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி திங்களன்று மரணமடைந்தார்.

நாயினி காலமானபோது அவரை கடைசியாகப் பார்ப்பதற்காக, அகல்யாவை குடும்பத்தினர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.

ஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img