மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவரது உடல் நேராக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே வி ஆனந்த உயிரிழந்த நிலையில் அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதால் இறுதிச் சடங்கு முறைப்படி நடைபெறாது.
எனவே கே.வி.ஆனந்தின் உடல் நேராக பெசன்ட் நகர் மின்மாயனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவை வைத்து, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த்.
இயக்குனர் கே.வி ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரது இல்லம் வந்தார்.
உடல் மருத்துவமனையில் இருந்து வராததால், உடனே நடிகர் சூர்யா, ஆனந்த் அனுமதிக்கப்பட்டிருந்த மியாட் மருத்துவனைக்கு விரைந்தார்.
இயக்குனர் கே.வி ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரது இல்லம் வந்தார்.
— Suriya Fans Army™ᵂᵉᵃʳ ᴹᵃˢᵏ (@Suriyafans_army) April 30, 2021
ஆனால் உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற தகவலை தொடர்ந்து காரை விட்டு இறங்காமல் மியாட் மருத்துவமனை புறப்பட்டார்.@Suriya_offl #RIPKVAnand pic.twitter.com/gYElU4v8m9