முது பெரும் ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர் மா.கோ.வைத்தியா காலமானார்.
ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) மூத்த ஸ்வயம்சேவகர் ம.கோ. வைத்யா(97) இன்று நாகபுரியில் காலமானார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 6 தலைவர்களுடன் (சர்சங்கசாலகர்களுடன்) பழகியவர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவுனர் டாக்டர். ஹெட்கேவார் தொடங்கி தற்போதைய தலைவர் டாக்டர் மோகன் பாகவத் வரை 6 பேருடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
மிகச்சிறந்த கல்வியாளர்! தருண்பாரத் மராட்டிய நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். மராத்தி, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பல கட்டுரைகள் பல்வேறு வார, மாத, நாளிதழ்களில் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.,ஸின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்துள்ளார்.
இவருடைய குடும்பம் முழுவதும் சங்கமயமானது. இவருடைய இரு புதல்வர்கள் சங்க பிரசாரகர்களாக இருந்து வருகின்றனர். டாக்டர் மன்மோகன் வைத்தியா ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சஹ சர் கார்யாவாஹ் (இணை பொது செயலாளர்) மற்றொருவர் ஸ்ரீராம் வைத்தியா ஆர்.எஸ்.எஸ் விஸ்வ விபாக்கில் (லண்டன் கேந்திரம்) பணியாற்றுகிறார்.
ம.கோ. வைத்தியா ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொறுப்பில் இருந்த காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பிரசாரகர்களு, செயல்வீரர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்.