வாய்ப்பு தருவதாக கூறி பெண்களின் வாழ்வை சீரழித்த இயக்குனர்! வசமாக சிக்கிய சம்பவம்!

Published:

vankodumai
vankodumai

மும்பையில் ஒரு பிரபல இயக்குனர் பல பெண்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பலான தொழிலில் ஈடுபடுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

மும்பையின் பாலிவுட்டில் பிரேம் என்பவர் இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கிறார் .இவர் ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றி மும்பை போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இவர் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனால் போலீசார் மாறுவேடத்தில் அவரை கண்காணித்தார்கள். அப்போது அவர் பலான வேலையில் ஈடுபடுவது உறுதியானது. அதனால் அவரை கையும் களவுமாக பிடிக்க ஒரு வலை விரித்தார்கள் .

அதனால் சில போலீசாரே அவருக்கு வாடிக்கையாளர் போல போன் செய்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய பிரேம் ஒரு அக்கௌன்ட் நம்பரை கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னார். அதன் படி போலீசார் அவரின் அக்கௌண்டுக்கு 2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்தார்கள். பிறகு பிரேம் சொன்ன இடத்திற்கு சென்று அவரிடமிருந்த 8 பெண்களையும் ,பல ஆண்களையும் கைது செய்தார்கள்.

மேலும் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் பல செல்போனைகளை மற்றும் கார் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். அவரோடு பணிபுரிந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்களும் படங்கள் மற்றும் விளம்பரம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல பெண்களை பலான வேலையில் சிக்க வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தார்கள்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அனைவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Related articles

Recent articles

spot_img