
லூதியானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான 48 வயதான அரசுப்பள்ளி ஆசிரியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மாநில அரசின் உத்தரவின்பேரில், பஞ்சாபில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் லூதியானா மாவட்டம் ஜக்ரான் நகரின் கீழ் வரும் கலிப் கிளான் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் சில நாள்கள் பள்ளிக்குச் சென்ற பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய 12 ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெற்றோர்களின் கோரிக்கையை அடுத்து, பள்ளியும் மூடப்பட்டது.