
சேலம் மாவட்டம் தலைவாசல் என்ற பகுதியில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் 30 வயது பெண் ஒருவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இருவரும் தினமும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்கள் என்பதும் இதனால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை தினத்திலும் இருவரும் பள்ளிக்கு வந்து ஒரு வகுப்பறையில் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியையின் கணவர் நேராக அந்த வகுப்பறைக்கு வந்து கதவை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியே தனது கணவர் மற்றும் கிராம மக்கள் சூழ்ந்ததால் அச்சத்தில் தலைமை ஆசிரியை கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து கதவை தட்டிய பின்னரே தலைமை ஆசிரியை மற்றும் அந்த ஆசிரியர் இருவரும் வெளியே வந்தனர்.
இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியையின் கணவர் மற்றும் கிராம மக்கள் கூறியதை அடுத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது