காதலன் அங்கே.. காதலி இங்கே.. சேர முடியா தவிப்பால் முடிவான தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
susaid
susaid

துபாயில் வசித்த காதலனும் ,இந்தியாவில் வசித்த காதலியும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்கள் .

தெலுங்கானாவின் ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கோல்லப்பள்ளியில் வசிக்கும் மனிஷா என்ற 21 வயதான பெண்ணும் ,அதே பகுதியில் வசித்து வந்த ராகேஷ் என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .

இந்நிலையில் அந்த காதலன் ராகேஷுக்கு துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார் .அப்போது துபாய் போகும்போது ராகேஷ் அந்த காதலியிடம் தான் விரைவில் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்து அவரை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு சென்றார் .

இதற்கிடையே அவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியாது. அதனால் அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள் .

அதனால் அந்த பெண் தன்னுடைய வீட்டில் தனது காதலை சொல்ல முடியாமல் தவித்தார் .அந்த காதலனிடமும் தன்னுடைய வீட்டில் தனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை கூறினார். அதை கேட்ட அந்த காதலன் தனக்கு வேலைஇருப்பதால் தான் இப்போது வரமுடியாது என்று கூறியுள்ளார்.

அதனால் மனமுடைந்த அந்த பெண்,தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட துபாயிலிருக்கும் அந்த காதலன் ராகேஷ் ,இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய தாய்க்கு துபாயிலிருந்து ஒரு சோகமான வீடியோவை வெளியிட்டார் .

அந்த வீடியோவில் அவர் மனிஷா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மனைவி இறந்த மறுவினாடியே மாப்பிள்ளை ஆகும் ஆண்களும், காதல் என்ற பெயரில் கயமை செய்யும் ஆண்களும், ஊர் சுற்ற ஒருத்தி உல்லாசத்திற்கு ஒருத்தி ஊரறிய உறவுக்கு ஒருத்தி என அலைகின்ற ஆண்களும் மலிந்து விட்ட காலகட்டத்தில், காதலித்த பெண் உயிரை விட்ட உடன், சந்தோஷமாக வாழவேண்டும் அதுவே வாழ்க்கைக்கு முக்கியம், மீண்டும் காதலிக்கலாம் திருமணம் செய்யலாம் என்று எண்ணாமல் அவளுக்காக உயிரை விட்ட காதலன் முடிவு ஆண்களிடையே அதிர்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.