விமான பயணத்தில் நட்பு! பெண்ணின் கைப்பையை பறித்து சென்ற மர்ம நபர்!

Published:

madurai-airport
airport

அசாம் மாநிலத்தை சேர்ந்த நிமிக் (36), நேற்று முன்தினம் அசாமில் இருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளார். விமான பயணத்தில் சலீம் என்ற நபர் நிமிக்கிற்கு அறிமுகமானார். இவர், டிப்டாப் உடையில், இனிமையாக பேசியதால் சிறிது நேரத்திலேயே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சென்னை வந்ததும், நிமிக்கிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்து சென்ற சலீம், பூங்கா நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
பின்னர் சலீம், நான் உனக்கு ஒரு கொலுசு எடுத்து தருகிறேன் வா, எனக்கூறி நேற்று நிமிக்கை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல நகை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, கொலுசை எடுத்து காலில் போட்டு நிமிக் அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, நிமிக்கின் கைப்பையை வைத்திருந்த சலீம், கழிவறை செல்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த பையில் ரூ.15 ஆயிரம், ஏடிஎம் கார்டு, செல்போன், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் நிமிக் தவித்தபோது, அவ்வழியே வந்த ரோந்து போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர். அப்போது, தான் ஏமார்ந்தது குறித்து நிமிக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img