தாய்மாமாவைக் காண சென்ற சிறுமி! நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder-2-1
murder-2-1

மேற்கு வங்காளத்தின் வடக்கு கொல்கத்தாவின் ஜோராபகன் பகுதியில் உள்ள சோவபஜாரில் வசிக்கும் ஒரு எட்டு வயதான சிறுமி புதன்கிழமை மாலை தனது தாய் மாமாவைப் பார்க்கச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் காணாமல் போயிருந்தார்.

இதனால் பதட்டமான அந்த பெண்ணின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள். அப்போது வழக்கு பதிந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

பின்பு போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடியதில் அந்த சிறுமியின் பிணம் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் இருப்பதை போலீசார் கண்டறிந்தார்கள்.

அப்போது போலீசார் அந்த சிறுமியின் பிணத்தை கைப்பற்றி அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .

மேலும் அந்த சிறுமி கொலையுண்ட இடத்தில் அவரை கொலை செய்ய பயன்படுத்த பட்ட கத்தி ,மற்றும் சிறுமியின் நான்கு பற்கள் மற்றும் கிழிந்து ரத்த கரை படிந்து உடைகளை போலீசார் மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

அந்த சிறுமி அவரின் பெற்றோர்க்கு மூன்றாவது மகளாவார். அவர் அடிக்கடி அந்த பகுதியில் தனியாக நடமாடுவதை யாரோ சில சமுக விரோதிகள் நோட்டமிட்டு வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

பின்னர் சந்தேகத்தின் பேரின் அந்த பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.