கொரோனாவை உலகம் வெற்றிகொள்ள இந்தியாதான் காரணம்: கனடா பிரதமர் பாராட்டு!

இந்தியா சற்றுமுன்
Justin-Trudeau
Justin-Trudeau

கொரோனா தொற்றை இந்த உலகம் வெற்றி கொள்ள முடியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தியாதான் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும். கனடா கோரியுள்ள கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவரிடம் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

பருவ நிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்பு போன்ற பிற முக்கிய விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.