கணவனின் கள்ள உறவை கண்டித்த மனைவி! கூலிப்படை வைத்துக் கொன்ற கணவன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
lovers fight
lovers fight

கணவனின் கள்ள உறவை கண்டுபிடித்த மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற கணவனை போலீஸ் கைது செய்துள்ளது

ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் சூரசாஹி கிராமத்தில் வசிக்கும் 37 வயதான அகய் மகாபத்ரா , 2017 ல் சஸ்மிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்விலே அந்த கணவனுக்கு ஏற்பட்ட கள்ள உறவால் விரிசல் விழுந்தது.

அகாய்க்கு அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்னோடு கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். அதனால் அவரின் மனைவி சஸ்மிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் தினமும் ஆபீஸிலிருந்து வரும் அவரின் கணவரின் உடையை சோதனை செய்துள்ளார். அப்போது அவரின் ட்ரெஸ்ஸிலிருந்த லிப்ஸ்டிக் கறையை பார்த்து அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.

murder-2-1
murder-2-1

இதனால் கணவனை சந்தேகப்பட்ட அந்த மனைவி அவரை தொடர்ந்து கண்காணித்தபோது அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு கள்ள உறவு இருப்பதை கண்டறிந்தார். அதனால் அதை பற்றி கேட்டு தினமும் கணவனிடம் சண்டை போட்டுள்ளார்.

அதனால் கோபமுற்ற அகாய், சஸ்மிதாவைக் கொலை செய்ய மனோஜ் பிரதான் (22) என்ற ஒருவரை கடந்த டிசம்பர் மாதம் நியமித்திருந்தார், அப்போது அவரின் முயற்சி தோல்வியுற்றது. அதன் பிறகு மனோஜ், பகீரதி, ஜிதேந்திர மற்றும் டோஃபன் ஆகிய நான்கு ஒப்பந்தக் கொலையாளிகளிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்து கொலை செய்யக் கூறியுள்ளார்.

அவர்கள் கடந்தவாரம் அந்த பெண்ணை வீட்டிற்குள் புகுந்து கொன்றனர். பின்னர் இந்த கொலை பற்றி போலீசார் துப்புத்துலக்கி அனைத்து கொலையாளிகளையும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.