மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரூ.50000 அபராதம்!

இந்தியா கல்வி சற்றுமுன்
school-1
school-1

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அனைத்து பள்ளிகளிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் சில மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளின் செய்முறை தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.