காதலிக்க மறுத்த பெண்! பாலியல், கத்திக்குத்து என தொல்லை தந்த இளைஞர்!

Published:

lady
lady

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசிக்கும் சல்மான் ஷாருக் என்பவர் ,சைபராபாத் பகுதியில் உள்ள நர்சிங்கி பகுதியில் உள்ள லக்ஷ்மி நகர் காலனியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

அந்த பெண் அங்குள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அந்த பெண்ணை ,சல்மான் இரண்டு ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு வருடமாக சல்மான் அவர் என்றாவது மனம் மாறி தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்வார் என்று பலமுறை முயற்சித்து வந்துள்ளார்.

அதனால் அவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த 29 வயதான பெண் மென் பொறியாளர் அவர் மீது கடந்த வாரம் போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்.

அதனால் கடுமையான கோபமுற்ற அந்த சல்மான் கடந்த செவ்வாய் கிழமையன்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் கத்தியோடு சென்று உள்ளார். அதன் பிறகு அந்த வீட்டின் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணின் அறைக்குள் சென்று கதவை அடைத்து அவரை சிறை பிடித்து பிறகு அந்த பெண்ணை அவரின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார் .உடனே அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .போலீசார் இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img