
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவிற்கும் 2002-ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவரது மகள் ஐராகான். இவர், கடந்த நான்கு வருடங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 14 வயதிலேயே தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவில் வர்க்க வேறுபாடு இல்லாமல் எல்லா வகையான குடும்பங்களிலும் இருக்கும் பெண்களும் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் நடிகர் அமீர்கானின் மூத்த மகள் ஐரா கான் தனக்கு 14 வயதாக இருக்கும் போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சொல்லியுள்ளார்.
இதுபற்றி அவர் சில மாதங்களுக்கு முன்னர் நான் சிறுமியாக இருக்கும்போதே என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அது சுமூகமாக இருந்ததால் என்னைப் பாதிக்கவில்லை. நான் என் அம்மாவுடன் வசிக்கும் போது 14 வயதில் ஒரு நபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.

அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது அடிக்கடி நடக்கவில்லை. அதனால் அதை புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதைப்பற்றி நான் வேறு யாரிடமும் கூறவில்லை. ஏனென்றால் அந்த பிரச்சனையை நான் கையாள வேண்டும் என நினைத்தேன் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதாக சொல்லியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த சில வாரங்களாக எனது வாழ்கை நார்மலாக நகர்வதை உணர முடிகிறது. மனச்சோர்வையும் கையாள முடிகிறது. யாரிடமாவது பேசும்போது நான் வேறு விதமாக நடந்து கொள்வதாக தெரிகிறது. அது தற்போது எனக்குள் ஒரு பகுதியாக இருக்கிறது.
அதன் மூலம் நான் ஓவர் ரியாக்ட் ஆகிறேன். அது எனது மனச் சோர்வின் வெளிப்பாடே. எனக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை நான் செய்வதில்லை. போதை மருந்துகளை உபயோகிப்பதில்லை. அதிகமாக காபி குடிப்பதில்லை. எனது வாழ்க்கைக்கு உடனடியான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நான் சோர்வாக இருந்தால் அதனை நான் யாருக்கும் சொல்வதில்லை. ஏனென்றால் அது எனக்குள் அதிகமாகி ஒருக்கட்டத்தில் வெடிக்கிறது. அப்போது நான் முழுவதுமாக உடைகிறேன். அதன் பின்னர் நான் நன்றாக இருப்பதாக உணர முடிகிறது. நான் உடையும் வரை அதைப்பற்றி என்னால் விளக்க முடியாது. அந்த உடைதல் என்னை நல்லவிதமாக உணரவைக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.