
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சத்தீஸ்கருடான பயணிகள் பேருந்து போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் வரிசையில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அவை இல்லாமல் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா, தில்லி, ஒடிசா , குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் , மத்தியப்பிரதேச அரசு பயணிகள் பேருந்து போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது .
பொதுமக்களின் நலன் கருதி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை சத்தீஸ்கருக்கான பயணிகள் பேருந்து சேவை மற்றும் சத்தீஸ்கரிலிருந்து மத்திய பிரதேசத்துக்கான பயணிகள் பேருந்து சேவை தற்காலிகாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்றும், அதனால் மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்தியப்பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.