
இளம் பெண் ஒருவர், பல்கலைகழகத்தில் நிரந்தர வேலை வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 வயதான பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி பல்கலைக்கழத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சரணப்பா என்ற நபர் அதே பல்கலைக்கழகம் நூலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்ததால் மிகவும் உரிமையோடு பேசி பழகி வந்த நிலையில், வீட்டுக்கு சென்ற பிறகு செல் போனிலும் பல மணி நேரங்கள் பேசி வந்தனர்.
நாளடைவில், வீடியோ காலில் பல மணி நேரம் செலவழித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் சரணப்பாவிடம் தனக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு உதவி செய்வதாக கூறிய சரணப்பா, நிபந்தனை ஒன்றை வைத்துள்ளார். அதன் படி, உனது நிர்வாண வீடியோவை அனுப்பினால் உடனே பணி நிரந்திரம் செய்ய உதவு செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்காத அந்த பெண், தான் வீடியோவை அனுப்புவதாகவும் அதனால் சீக்கிரம் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
ஆனால், வீடியோவை பார்த்து ரசித்து விட்டு, சரணப்பா பணி நிரந்தரம் செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண்ணின் தொல்லை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த சரணப்பா, அந்த பெண் தனக்கு அனுப்பிய நிர்வாண வீடியோவை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் சரணப்பாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.