கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் லேசான கொரோனா அறிகுறி இருந்தால் உடனே ஸ்கேன் செய்கின்றனர். ஆனால் லேசான கொரோனா அறிகுறிக்கு ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தில்லி எய்ம்ஸ் இயக்குனர் கூறியுள்ளார்.
ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300 முதல் 400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இளம் வயதினர் அடிக்கடி சிடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று தில்லி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.