திருவள்ளூர் மாவட்டத்தில் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மனைவி வெந்நீரை எடுத்து ஆணுறுப்பு மேல் ஊற்றிய மனைவிமீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் வயது 43 இவர் சென்னையில் மின் வாரியத்தில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஏற்கனவே பவுசியா என்கின்ற மனைவி உள்ளநிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது இதனை மனைவி பவுசியா தட்டி கேட்டுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இம்ரான்கான் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாயா என ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடைய காலால் எட்டி உதைத்துள்ளார்.
பிறகு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார் நான் இருக்கும்போது உனக்கு இன்னொரு மனைவி கேட்கிறதா என கூறி வெந்நீரை எடுத்து கணவனின் ஆண் உறுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் ஊற்றி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் வீட்டிலிருந்தபடியே கத்தி கூச்சல் இட்டுள்ளார் இதனையடுத்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் மனைவி பவுசியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கணவன் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.