மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்த ரயிலில் இருந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் மெக்சிகோ நகரில் தென்கிழக்கு பகுதியில் டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணி அளவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் இரண்டாக உடைந்து கீழே விழுந்து உள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் அவர்களை மீட்பு குழுவினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டதாக மெக்சிகோ நகர மேயர் Claudia Sheinbaum தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது இடிந்து விழுந்த Metro 12 line கட்டப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதாகவும் அதில் பயணித்த இந்த ரயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.