பாசிட்டிவ் என்று பல லட்சங்களை பறிக்கும் தனியார் மருத்துவமனை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
hospital - 2026

தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என பொய் கூறி 14 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனை இதனை சாதகமாக கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களை கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி பணத்தைப் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தென் சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி 16 லட்சம் வரை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கொரோனா பாசிட்டிவ் என்று யார் சென்றாலும் ரூபாய் 3 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஆக்சிஜன் இல்லை எனக்கூறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாக தகவல் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.