நான் தான் உன் ப்ரண்ட் பேசறேன்… போன்காலால் ரூ.7லட்சம் இழந்த நபர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
cellphone speech - 2026

நண்பரை போல பேசி ஒரு தொழிலதிபரிடம் ஏழு லட்சம் மோசடி செய்த நபரை போலீஸ் தேடி வருகிறது .

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர் மராத்தஹள்ளி வட்டாரத்தில் தன்னுடைய குடும்பத்தோடு வசிக்கிறார் . அவருக்கு ஏராளமான தொழில்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துஉள்ளது .இதை தெரிந்துகொண்ட சிலர் அவரை புது டெக்னீக்கில் ஏமாற்றினர் .

அதன் படி கடந்த ஏப்ரல் 29 ம் தேதி காலை அவருக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மிஸ்டு கால் வந்தது .அதை பார்த்த அவர், அந்த நம்பருக்கு போன் செய்தார் .அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தான் அவரின் பள்ளி நண்பர் சஞ்சய் என்று கூறினார் .அதை கேட்ட அவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.

பின்னர் அவரோடு பேசிய சஞ்சய் தான் மிகவும் உடலநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதனால் சிகிச்சைக்கு அவசரமாக ஏழு லட்ச ரூபாய் தேவையென்றும் கூறினார். அதை கேட்ட அந்த தொழிலதிபர் தன்னுடைய பள்ளி தோழருக்காக உதவி செய்ய முன்வந்தார் .

அதனால் அவர் சொன்ன அக்கௌண்டுக்கு அவர் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்பினார். பிறகு அந்த நம்பருக்கு போன் செய்த போது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனால் சந்தேகப்பட்ட அவர் அந்த நபரின் விவரங்களை ஆராய்ந்து பார்த்தார் . அப்போது அது சஞ்சய் அல்ல வேறு யாரோ அவரைப்போல் பேசி பண மோசடி செய்ததை கண்டு அதிச்சியடைந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை, சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.