தந்தை இறக்க நீங்களே காரணம்.. பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த மகன்!

dr 2
dr 2

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது மகன் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் தான் காணப்படுகின்றனர். இருப்பினும் தங்களால் முடிந்த அளவு வரக்கூடிய நோயாளிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று பல மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், சிலர் தங்கள் உறவினர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுகின்றனர்.

இதேபோல கர்நாடகா மாநிலம் பெல்லாரி டவுனை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் டாக்டர் பிரியதர்ஷினி என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, உயிரிழந்த முதியவரின் மகன் திப்பேசாமி என்பவர் மருத்துவர் பிரியதர்ஷினியிடம் தனது தந்தைக்கு நீங்கள் உரிய சிகிச்சை அளித்து இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என வாக்குவாதம் செய்துள்ளார்.

இருப்பினும் முதியவரின் மகனை மருத்துவர் பிரியதர்ஷினி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த திப்பேசாமி பெண் மருத்துவரான பிரியதர்ஷினியை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அந்த நபர் மருத்துவரை தாக்கும் காட்சிகள் அந்த கொரோனா வார்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பெண் மருத்துவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் மருத்துவர் பிரியதர்ஷினியும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இந்த புகாரின் பேரில் திப்பேசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

மேலும் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜனார்த்தன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உறவினர்கள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப்பணியாளர்களாக மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரியதர்ஷினி மீது நடந்த தாக்குதல் மிக கண்டிக்கத்தக்கது எனவும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories