
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் கர்நாடகம் மாநில மது வகைகளை கடத்தி வந்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேரை கைது செய்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் அடுத்த வடச்சேரி கூட்டு ரோட்டில் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வாகன சோதனையில் உமராபாத் காவல் துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் நிற்காமல் சென்றது. காவல்துறையினர் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். வாகனத்தையும், வாகனத்தில் வந்தவர்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கர்நாடக மாநில மது வகை பாட்டில்கள் 60 எண்ணிக்கை கொண்ட மது வகைகள் விற்பனைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. மது பாட்டில்களை கடத்தி வந்த மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் தாமரைக்கனி வயது (28) சட்டக்கல்லூரி மாணவன் , அதே பகுதியைச் சேர்ந்த கீழ் மிட்டாளம் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி மகன் விஜய் வயது (25) ஆகிய இருவரையும் உமராபாத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.