கர்நாடகத்திலிருந்து மது கடத்தல்! ரூ.40 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் பறிமுதல்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
madhu 2 - 2026

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

தமிழக கர்நாடக மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி மகேஷ்குமார் கூறியதாவது:

கடந்த ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மற்றும் கார் இருசக்கர வாகனங்களில் மது கடத்தல் நடைபெற்று வந்தது.

Alcohol smuggling
Alcohol smuggling

அதனை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை கடத்தி வந்த 40 கார்கள் மற்றும் 80 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். பேட்டியின்போது டிஎஸ்பி சங்கர் உடனிருந்தார்

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.