பதபதைக்கும் காட்சி! ரயிலில் இருசக்கர வாகனத்தோடு மாட்டிய இளைஞர்!

இந்தியா சற்றுமுன்
train acc
train acc

குஜராத்தில் தனது ஸ்கூட்டருடன் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் கடைசி நொடியில் உயிர் தப்பிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சந்த்யா பாலத்தின் அருகே இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரை வைத்து ரயில்வே தண்டவாளத்தில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது ஸ்கூட்டர் ரயில்வே தண்டவாளத்தில் மாட்டி கொண்ட நிலையில் அப்போது அந்த வழியாக ரயில் ஒன்று வந்துள்ளது.

kujarath
kujarath

ரயில் வருவதை பார்த்து தனது ஸ்கூட்டரை அந்த இளைஞர் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இறுதியில் தனது கைகளை காட்டி ரயிலை நிறுத்தும்படி அந்த இளைஞர் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கிறார். ஆனால் ரயில் நிற்காமல் வந்துகொண்டிருக்க, கடைசியில் அந்த இளைஞர் சில வினாடிகளில் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

ரயில் ஸ்கூட்டரில் மோதி சில தூரம் இழுத்துச்சென்று பின் நிற்கிறது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.