
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரரும் பறக்கும் சீக்கியர் என பட்டப் பெயர் பெற்றவருமான மில்கா சிங் தமது 91ஆவது வயதில் காலமானார்.
ஒலிம்பிக் உள்பட பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பல பெற்று, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் மில்கா சிங். மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவரை பறக்கும் சீக்கியர் என்று பட்டப் பெயர் கொண்டு அழைத்தனர்.
மில்கா சிங், கடந்த மே மாதம் கொரோனா அறிகுறியுடன் சிரமப் பட்டார். இதை அடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொனதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை அடுத்து சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது.
மில்காசிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமது டிவிட்டர் பதிவில், தேசத்தின் கனவுகளைக் கைப்பற்றி எண்ணற்ற இந்தியர்களின் உள்ளங்களில் அமர்ந்தவர் மில்கா சிங் என்று குறிப்பிட்டுள்ளார்.
மில்கா சிங் மறைவுக்கு பஞ்சாப், ஹரியானா மாநில முதல்வர்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.