கொரோனா: பிரபல நடிகை மகனை தொடர்ந்து கணவனையும் இழந்த சோகம்!

இந்தியா சற்றுமுன் சினிமா
kavitha 1
kavitha 1

கொரோனா சிலர் வாழ்வில் ஆடும் கோரத் தாண்டவம் கொடுமையானதாக இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை கவிதாவின் மகன் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சோகம் மறையும் முன் நேற்று (29/6/21) அவரது கணவரும் உயிரிழந்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் இவரது கேரக்டர் மிகவும் முக்கியமானது.

kavitha
kavitha

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கியதுமே, ஷூட்டிங்கிற்கு பிரேக் எடுத்து விட்டு ஐதராபாத்தில் வீட்டோடு இருந்து வந்தார். முதல் அலை முடிந்து ஷூட்டிங் தொடங்கிய போது கவிதா ஷூட்டிங் வரவில்லை.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கி ஐதராபாத்தில் பலரும் பாதிக்கப்பட்ட போது, கவிதாவின் வீட்டிலும் அவரது மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானது.

மகனுடன் கவிதாவின் கணவர்
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் கவிதாவின் மகன் சாய் ரூப் கடந்த ஜூன் 15ம் தேதி இறந்து போனார்.

kavitha - 2026

அப்போது முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மரணமடைந்து விட்டார்.

பதினைந்து நாள்களுக்குள் நடிகை கவிதா இரண்டு உயிரை கொரோனாவுக்குப் பலி கொடுத்திருக்கும் சம்பவம் ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.