anand mahindra - 2026

மஹிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பல வேடிக்கையான வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ மூலம் அவர் ஒரு முக்கியமான வணிக பாடத்தையும் விளக்கி உள்ளார்.

34 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு சிறிய குளத்தில் ஒரு புலி மற்றும் வாத்து ஆகியவற்றைக் காணலாம். புலி வாத்தை பிடிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், அது தண்ணீரில் ஒளிந்து எளிதாக புலியிடம் இருந்து தப்பி விடுகிறது.. இந்த வீடியோவை இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து பதிவிட்ட மகிந்த்ரா ” எந்தவொரு மேலாண்மை சொற்பொழிவையும் விட சிறந்தது.. சிறிய, வேகமான மற்றும் விரைவான புத்திசாலித்தனமாக இருப்பது வணிகத்தில் உள்ள நன்மைகளை விளக்குகிறது. அதனால்தான் பெரிய நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைத் தொடர தொடக்க குழுக்கள் மற்றும் தொடக்க கலாச்சாரங்களை தங்களுக்குள் உருவாக்க வேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார்..

இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கடினமான காலங்களில் எப்படி சமாளித்து முன்னேற வேண்டும் எனவும் புதிய வாய்ப்புகளை தேட வேண்டும் என்று ஊக்கமளிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending