8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

Published:

ramnath khovind
ramnath khovind file pic

கர்நாடகா, ம.பி., உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் கொண்டது இந்தப் பதவிக் காலம். அதன்பிறகு ஆளுநரை மாற்றுவது அல்லது அவரே தொடர்வதை ஜனாதிபதி முடிவு செய்வார். அந்த வகையில், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

  • கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்
  • மிசோரம் ஆளுநராக ஹரிபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேசம் மாநில ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இமாச்சப் பிரதேசம் ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மிசோரம் ஆளுநராக இருந்து வருகிறார்.
  • திரிபுரா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அரியானா மாநில ஆளுநராக உள்ளார்.
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது திரிபுரா ஆளுநராக உள்ளார்.
  • அரியானா மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது இமாச்சல் பிரதேச ஆளுநராக உள்ளார்.
ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img