களப்பணிகளில் சிறந்து விளங்கும் சாதிக்கத் தூண்டும் நபர்களை பத்ம விருதுகளுக்காக மக்கள் பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு நாட்டு மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், களப்பணிகளில் சிறந்து விளங்கும் சாதிக்கத் தூண்டும் நபர்களை பத்ம விருதுகளுக்காக மக்கள் பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுவரை பத்ம பூஷன் , பத்ம விபூஷன் போன்ற விருதுகள் பெரும்பாலும் நடிகர் நடிகைகள், டான்சர்கள் என கலைத்துறையில் இருப்போருக்கும் நாட்டு நலனுக்கு பயனளிக்காத சிலருக்குமே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் பாரதப் பிரதமர் இன்று மக்களை பத்ம பூஷன் , பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைக் கொடுக்க மக்களையே தேர்வு செய்ய அழைக்கிறார்.
தொழில் , வேலை, சேவை , கண்டுபிடிப்பு , நேர்மறை சிந்தனையாளர் , அறிவியல் , ஆசிரியர் , நாட்டின், மக்களின் நலம் விரும்பி சாதனையாளர் என எவரையும் பரிந்துரைக்கலாம். நீங்கள் சாதனையாளர் வெளி உலக வெளிச்சம் பெறாத தகுதியான எவரையும் பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் சொன்னது வரவேற்க வேண்டிய ஒன்று என்று தங்கள் கருத்துகளை சமூகத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டபோது, களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து நாம் அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படித் தெரிந்திருந்தால், மக்களின் பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம்.
https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீங்கள் உங்களின் பரிந்துரைகளை மேற்கொள்ளலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சமுதாயத்தின் அடிமட்டத்தில் தொண்டாற்றுபவர்களையும் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம் என்று மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்துறை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் குடியரசு நாளில் பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளையும் விண்ணப்பங்களையும் செப்டம்பர் 15 வரை இணையத்தளத்தில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் திறமையானவர்கள் பலர் உள்ளதாகவும், அடிமட்டத்தில் தொண்டாற்றி வரும் அவர்கள் குறித்துக் கண்டும் கேட்டும் ஈர்க்கப்பட்டிருந்தால் அவர்களைப் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதைப் பாராட்டி பலரும் வரவேற்று கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் மனத்தின் குரல் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர், விளம்பரமில்லாமல் தன்னலமின்றித் தொண்டாற்றி வருவோரைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது, அது ஓர் அறிவிப்பாகவே வெளியாகியுள்ளது.