
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி, தங்கப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இது ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் சாதனை என்பதும், முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் 100 ஆண்டு இந்தியாவின் கனவை நனவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா என்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போது, ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இதை அடுத்து அவரை இந்தியாவின் தங்க மகன் என்று குறிப்பிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 130 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு டிவிட்டர் சமூகத் தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறியது இந்தியா.
தங்க மகனாக ஜொலிக்கும் நீரஜ் சோப்ராவின் தடம் பதித்த களப் பயணம் இது!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணியாற்றுகிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டு, காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று, ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்தின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்துள்ள நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டில், இனிப்புகள் வழங்கி மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
Indian medallists in Tokyo Olymipics 2021
- Mirabai Chanu Silver Medal in Weight Lifting (Women’s 49kg)
- Indian Hockey Team Bronze Medal in Men’s Hockey tournament
- PV Sindhu Bronze Medal in Women’s Single Badminton
- Lovlina Borgohain Bronze Medal in Women’s Welterweight Boxing
- Ravi Kum Dahiya Silver Medal in Men’s 57 kg Wrestling
- Bajrang Punia Bronze Medal in Men’s Freestyle 65kg
- Neeraj Chopra Gold Medal in Men’s Javelin Throw: 87.58 (First Gold Medalist from India in Olympics 2021)