Tomato Double Beans Fry
Tomato Double Beans Fry

தக்காளி டபூள் பீன்ஸ் ஃப்ரை
தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி – 3,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
டபுள் பீன்ஸ் – 200 கிராம்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்புத்தூள் – சிறிது, சோம்பு -1 டீஸ்பூன்.

செய்முறை

கழுவி சுத்தம் செய்தடபுள் பீன்ஸை உப்பு போட்டு தண்ணீரில் நன்கு வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்புத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், வெந்த டபுள் பீன்ஸை போட்டு பிரட்டி வறவறவென வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: சோயா பீன்ஸ், காராமணி, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, ஸ்வீட்கார்ன், பட்டாணி சுண்டலிலும் ஃப்ரை அல்லது கிரேவியாகவும் செய்யலாம்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending