October 20, 2021, 1:46 pm
More

    ARTICLE - SECTIONS

    ஆ.. இவ்வளவா..! ஆப்பிள் சீடர் வினிகர்!

    apple cider vinegar
    apple cider vinegar

    ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர்.
    இவற்றில் ஏராளமான மருத்துவ பயன்கள்
    அடங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் சீடர்
    வினிகர் காய்ச்சல், அழற்சி மற்றும் நோய்
    தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்து விளங்குகிறது.

    ஆப்பிள் சைடர் வினிகர் உடலுக்கு பல நற்குணங்களை உண்டாக்கும் என்று கேள்விபட்டு இருப்போம். இதன் நற்குணங்களின் பட்டியலை கீழே காணுங்கள்.

    குளுக்கோஸ் அளவைக் குறைக்க
    ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிடிக் அமிலம், ஸ்டார்ச் செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.

    கெட்ட கொழுப்பை குறைக்க
    ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin), உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்கும்.

    எலும்புகள் வலு பெற
    பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இன்னும் பல கனிமங்கள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளன. இதில் உள்ள பொட்டாசியம், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது. மக்னீசியம், செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது.

    கீழ்வாதத்தை குணப்படுத்துவதற்கு…
    கீழ்வாதமானது, உடலில் அமிலப் படிகங்கள் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சைடர் வினிகர், உடலின் கார சமநிலையை கட்டுப்படுத்தி, அவற்றை உடைத்தெறிகிறது.

    பொடுகைப் போக்க
    தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும்.

    இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .

    இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.

    அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .

    இதிலுள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.

    முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும். தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் வராமலும் தடுக்கும்.

    இது, தலையிலுள்ள பொடுகை நீக்குவதோடு, அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தியாக்கவும் உதவும். தலையில் ஒவ்வொரு பகுதியாக வகுடு எடுத்து அங்கே தண்ணீரில் நனைத்த ஆப்பிள் சிடர் வினிகரை அப்ளை செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் நனைத்த துண்டை நன்கு பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச, முடி உதிர்வது கட்டுப்படும்.

    தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும்.

    சளி, இருமல், தொண்டைப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை அளிக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

    *இதிலுள்ள அசிடிக் ஆசிட் (Acetic Acid) உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
    தினமும் இரண்டு லிட்டர் நீரில் 30 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடித்துவர, அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறும்.

    அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் தலைவலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு, உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் வேண்டாம். தண்ணீர் மற்றும் ஜூஸ்களில் கலந்து குடிக்கும்போதும், முகத்தில் பூசும்போதும் அதன் வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
    ஆப்பிள் சீடர் வினிகரின் மருந்தளவுகள்
    ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும். அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும்.

    • உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும். பொதுவாக ஒரு டம்ளர் நீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்துவதே, ஆப்பிள் சீடர் வினிகரை அருந்துவதற்கு பொதுவான வழியாகும்.

    ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு ரொம்பவே நல்லது. உடலின் பி எச் லெவலை சரியா வெச்சுக்கும். டாக்சின் வெளியேற்ற உதவும்.
    உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும். உடனே பலன் தெரியாது. தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒரு மாதம் கழித்து தெரிய தொடங்கும். கிருமி நாசினி, பொடுகு தொல்லைக்கு நல்ல மருந்து. ஸ்கின் அலர்ஜிக்கு பயன்படுத்தலாம். இன்னும் பல வழிகளில் பயன்படும். வீட்டில் ஒவ்வரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து பொருள் அது.
    ஆர்கானிக் தான் வாங்க வேண்டும். பில்டர் செய்யாதது தான் நல்லது. பாட்டலின் கீழே துகள்கள் படிந்து இருக்கும்.

    1,தினமும் ஒரு டம்பளர் கிரீன் டி அல்லது டம்பளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இல்லைனா ஒரு பாட்டில் தண்ணியில் இரண்டு ஸ்பூன் கலந்து கொஞ்சம் கொஞ்சமா நாள் முழுதும் சிப் பண்ணலாம். ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் வரை தான் எடுத்துக்கணும். நேரிடையா அப்படியே அதை பயன்படுத்த கூடாது. வாய் வழியே குடிக்க எதில் வேணாலும் ஒரு ஸ்பூன் மட்டும் கலக்கலாம். ஆனால் தலைக்கே, ஸ்கின்க்கோ போட ஒரு ஸ்புனுக்கு மூன்று ஸ்பூன் 1 ஈஸ்ட் 3 என்ற வீதத்தில் கலந்து தான் தேய்க்கணும். பொடுகு ஓடியே போயிடும். அனைவரும் பயன்படுத்த வேண்டியே ஒரு அருமருந்து. எந்த பிரான்ட் என்றாலும், அன் பில்டர் ஆர்கானிக் பயன்படுத்ததும்.

    2,தினமும் ஓவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் ஒரு பெரிய ஜூஸ் குடிக்கும் டம்பளர் நீரில் ஒரு ஸ்பூன் அலது சுவைக்கு ஏற்ப குறைத்து , கலக்கி குடிங்க.‌ ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமாக இருக்கலாம் . இது போல மூன்று வேளையும் செய்யலாம். இல்லைனா கிரீன் டீயில் இதே போல கலக்கி குடித்தால் இன்னும் நல்லது. இப்படி செய்ய பிடிக்கவில்லை எனில், ஒரு பாட்டில் வாட்டர் கேனில் ஒன்னரை ஸ்பூன் (நார்மல் சைஸ் ஸ்பூன் தான் ) சேர்த்து அந்த தண்ணியை அப்பப்ப நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் சிப் பண்ணி குடிங்க. லிட்டர் அளவெல்லாம் கிடையாதுங்க. உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யலாம். ஆனால் அப்படியே குடிக்க கூடாது , ஒரு நாளைக்கு 2 இல்லையெனில் 3 டி ஸ்பூன் தான் சேர்த்துக்கனும். இந்த இரண்டை மட்டும் கடைபிடிங்க.

    3,தலைக்கோ இல்லையெனில் உடம்பு, முகத்துக்கோ பயன்படுத்துவதாக இருந்தால், 1 ஈஸ்ட் 3 , அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து தேய்க்கணும். கண்ணில் படாம பார்த்துக் கொள்ளனும். பரு இருந்தால் போன உடன் பயன்படுத்தவும். அவ்வளவு தான். இதன் பலன் எல்லாம் ஆர்கானிக் அன்பில்டரில் மட்டுமே கிடைக்கும்.

    4,பளபளக்கும் கூந்தல் வேண்டுமா?

    குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல்
    மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும் .மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு வினிகரை சேர்த்து கலக்கவும். இதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது வெளியில் போய்விட்டு வந்தாலோ, மேக் அப் போடும் முன்போ இந்த கலவையை உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

    5,சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா?
    ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.

    6,அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகள்

    சமையல் சோடா கிளீன்ஸர் – சமையல் சோடாவையும், ஆப்பிள் சிடர் வினிகரையும் கலந்து நீங்களாகவே உங்களுக்குத் தேவையான வெண்மைப்படுத்தும் முகமூடியை (Whitening Mask) செய்யலாம். இந்த பசைக்காக நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி, நாளொன்றுக்கு இருமுறை போட்டுக் கொள்ளலாம்.

    நீங்கள் வினிகர் மற்றும் சமையல் சோடாவை போடும் போது வரும் குமிழிகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். அந்த குமிழிகள் உடனடியாக வருவது குறைந்து விடும். மாறாக, நீங்கள் எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடாவை கலக்கலாம். அதனை சாதாரணமாக போட்டு விட்டு, அது காயும் வரை பொறுத்திருந்து, பின்னர் கழுவி விடவும்.அக்குள்களை வெண்மையாக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். ஒரே இரவில் அற்புதங்களை இது நிகழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மேலும், ரேஸர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்ப்பது நலம். ஏனெனில், கருப்பான அக்குள் உருவாக இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன. முடிகளை நீக்குவதற்கு மெழுகை பயன்படுத்த தொடங்குங்கள். நீங்கள் வெண்மையான அக்குளைப் பெற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சொல்லும் வகையில் பொறுமையும் அவசியம்.

    ஆர்த்ரிட்டீஸ் அறிகுறிகளான வலி, அழற்சி, வீக்கம், சிவத்தல், மூட்டுவலி போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.

    இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், அல்கலைன் பொருட்கள் மூட்டுகளில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

    பயன்படுத்தும் முறை

    1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர், கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறுதளவு பட்டை தூள் சேருங்கள். ஒரு முறை அல்லது ஒரு நாளைக்கு இரு முறை என குடித்து வாருங்கள்.

    மற்றொரு முறை

    ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் சம அளவு வெதுவெதுப்பான நீரை கலந்து கொள்ளவும். அதை பஞ்சில் நனைத்து மூட்டுகளில் தடவிக் கொள்ளுங்கள். அப்படியே சில மணி நேரம் வைத்து பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். இதை 2-3 தடவை என ஒரு நாளைக்கு செய்து வாருங்கள்.

    உடல் உடை அதிகளவில் இருப்பது நமது உடல் நலனை பாதிக்கும்.

    பயன்படுத்தும் முறை

    2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

    இதை தினமும் காலையில் மாலையில் எடுத்து வாருங்கள்

    உடல் எடை வெகு சீக்கிரமாக பெண்களுக்கு குறைந்து விடும்.

    பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது. அதிலும் குறிப்பாக 18-44 வயதை அடைந்த பெண்கள் இதனால் அதிகளவில் பாதிப்படைகின்றனர். இது பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினையை உண்டு பண்ணும் முக்கியமான ஒன்றாகும். 6-12% பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர் என்று அமெரிக்க ஆராய்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.

    இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம்யை போக்க ஆப்பிள் சிடார் வினிகர் பெருமளவில் பயன்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இன்சுலின் சுரப்பு குறையும் டெஸ்ட்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையும் குறையும்.

    பயன்படுத்தும் முறை

    2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

    இதை தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்னால் சாப்பிட்டு வாருங்கள்.

    இதை தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணலாம். அப்படியே உங்கள் அளவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 2-3 தடவை என ஒரு கிளாஸில் 2 டேபிள் ஸ்பூன் கலந்து குடித்து வாருங்கள்

    பெண்களுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும். மாதவிடாய் பிறகு காலங்களில் இந்த அதிக கொலஸ்ட்ரால் காரணமாக ஏகப்பட்ட பிரச்சினை உண்டாகும். இது ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கும். ஏன் இந்த மாதவிடாய் பிரச்சினை இதய நோய்கள் வரக் கூட காரணமாக அமைகிறது.

    2009 ல் அமெரிக்க கார்டியோலஜி நாளிதழ் படி கெட்ட கொலஸ்ட்ரால் மாதவிடாய் நின்ற பிறகு ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

    எனவே பெண்கள் எப்பொழுதும் தங்கள் கொலஸ்ட்ரால் அளவை கண்காணித்து வருவது முக்கியம். இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய்கள் மற்றும் பக்க வாதத்தை ஏற்படுத்தும். எனவே இந்த எல்டிஎல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாம்.

    1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

    இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு மாதம் வரை குடித்து வாருங்கள்

    அப்படியே 2 டேபிள் ஸ்பூன் வரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி கொள்ளுங்கள்.

    இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுவது பின்னாளில் டைப் 2 டயாபெட்டீஸ் வர வாய்ப்புள்ளது.

    டைப் 2 டயாபெட்டீஸ் என்பது இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல், இன்சுலின் சுரப்பு ஏற்படாமல் இருப்பது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு ஆப்பிள் சிடார் வினிகர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் ஆன்டி கிளைசெமிக் விளைவு இன்சுலின் சென்ஸ்டிவ்விட்டியை அதிகரிக்கிறது.

    ஆப்பிள் சிடார் வினிகர் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி அதிக இரத்த போக்கு மற்றும் இரவில் வியர்த்தல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. உடம்பில் உள்ள ஆல்கலைன் அளவை சமநிலை படுத்தி தலைவலி மற்றும் மாதவிடாய் அறிகுறிகளை சரி செய்கிறது. பொட்டாசியம் மூட்டு வலி போன்றவற்றிற்கு உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை

    1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். அதனுடன் சிறுதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்

    இதை தினமும் இரண்டு தடவை குடித்து வந்தால் மாதவிடாய் அறிகுறிகள் நின்று விடும்.

    யோனி பகுதியில் அரிப்பு என்பது எல்லா வயது பெண்களையும் தாக்க கூடியது. இது நோய்த்தொற்று, உடலுறவு மூலம் பரவும் நோய்கள், கெமிக்கல் அரிப்பு இவற்றால் உண்டாகிறது.

    அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உங்களை அசாதாரணமாக உணர வைக்கும். இதை ஆப்பிள் சிடார் வினிகர் வைத்து சரி செய்யலாம்.

    இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அரிப்பை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது. இது யோனி சரும பகுதி pH அளவை சமநிலையில் வைக்கிறது.

    இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்,குடலில் மற்றும் யோனி பகுதியில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்தல் போன்ற செயல்கள் மூலம் அரிப்பை போக்குகிறது.

    வெளியே பயன்படுத்தும் முறை

    2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த நீரைக் கொண்டு தினமும் யோனி பகுதியை அலசி வாருங்கள்.

    மற்றொரு முறை

    2 கப் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த டப்பில் 15 நிமிடங்கள் காலை மடக்கி உட்கார்ந்து இருங்கள். இப்படி தினமு‌ம் யோனி பகுதியை ஆப்பிள் சிடார் வினிகர் கொண்டு அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    எடுத்துக் கொள்ளும் அளவு

    1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் மற்றும் -1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு தடவை குடித்து வாருங்கள்.
    75% பெண்களுக்கு ஒவ்வொரு மாதமு‌ம் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் என்னவென்றால் வயிறு மந்தம், நீர்த்தேக்கம், தலைவலி, வயிறு பிடிப்பு, மனநிலையில் மாற்றம், எரிச்சல், பசி, மலச்சிக்கல், தலைவலி, பருக்கள், மார்பகம் பெரிதாகுதல், சோர்வு போன்றவை ஏற்படும்.

    ஆப்பிள் சிடார் வினிகர் இந்த மாதிரியான அறிகுறிகளை குணப்படுத்துகிறது.

    பயன்படுத்தும் முறை

    1-2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

    அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வாருங்கள்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,569FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-