pulliyappa
pulliyappa

இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம் காயுத்தம்பரி காலனி பகுதியில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 10 நாட்கள் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பித்து, நீர் நிலைகளில் கொண்டு சென்று கரைப்பார்கள்.

இந்நிலையில், நேற்று விநாயகர் சிலை வைத்துள்ள இடத்திற்கு அருகே, விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பித்து கொடுக்கும் வகையில் அப்பகுதியை சார்ந்த புள்ளையப்பா என்ற 25 வயது இளைஞர், பாடல்கள் பாடி ஆடிக்கொண்டு இருந்தார்.

pulliyappa 3
pulliyappa 3

இந்த சூழ்நிலையில், அவர் ஆடிக்கொண்டு இருக்கும் போதே, திடீரென மூச்சடைத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலேயே இந்த சோகம் நடந்துள்ளது. அவரை மீட்டு மயக்கமடைந்து விழுந்ததாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தெரிவிக்கையில், மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
pulliyappa 1
pulliyappa 1

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உறவினர்களும் – நண்பர்களும் புள்ளையப்பாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும், புள்ளையப்பா அங்குள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending