02-06-2023 2:22 PM
More

    AI as my Member of Parliament

    Sare Jahan Se Accha

    Shut up. Shall We?

    Homeஇந்தியாஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை! (முழுமையாக...)
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    உலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை! (முழுமையாக…)

    pm modi in un
    pm modi in un

    ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்…
    தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

    வணக்கம் நண்பர்களே…. மாண்புமிகு அப்துல்லா ஷாஹித் அவர்களே இந்ட அவையின் தலைவராக பதவியேற்றுள்ள உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அனைத்து வளரும் நாடுகளுக்கும், குறிப்பாக சிறிய தீவுகள் போல் உள்ள வளரும் நாடுகளுக்கும் நீங்கள் இந்த அவையின் தலைவராக இருப்பது பெருமைக்குரிய விஷயம்.

    தலைவர் அவர்களே, கடந்த ஒன்றரை வருடங்களாக, உலகம் முழுவதும் 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்கொள்கிறது. இவ்வளவு கொடூரமான தொற்றுநோயால் உயிர் இழந்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்; அவர்களது குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    pmmodi in un
    pmmodi in un

    தலைவர் அவர்களே, ஜனநாயகத்தின் தாய்- Mother of Democracy என்ற சிறப்பைக் கொண்ட ஒரு நாட்டை நான் பிரதிநிதியாக நான் இங்கு வந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகால ஜனநாயகத்தின் மிகப் பெரிய பாரம்பரியம் எங்களிடம் உள்ளது. இந்த ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த 75ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது பன்முகத்தன்மை, நமது தனிச்சிறப்பு வலுவான ஜனநாயகம்.

    டஜன் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகள், வெவ்வேறு வாழ்க்கை முறைகள், உணவு வகைகள் கொண்ட நாடு. இது துடிப்பான ஜனநாயகத்தின் சிறந்த உதாரணம்.

    ஒரு காலத்தில் ஒரு ரயில் நிலையத்தில் டி-ஸ்டாலில் தனது தந்தைக்கு உதவிய ஒரு சிறு குழந்தை, இந்தியாவின் பிரதமராக, இன்று நான்காவது முறையாக United Nations General Assemblyயில் உரையாற்றுவது இந்தியாவின் ஜனநாயகத்தின் வலிமை.

    நீண்ட காலம் குஜராத்தின் முதல்வராகவும், பிறகு கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராகவும், நான் 20 ஆண்டுகளாக அரசாங்கத் தலைவராக நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.

    நான் என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்-
    ஆம், ஜனநாயகத்தால் செய்ய முடியும்.
    ஆம், ஜனநாயகம் செய்திருக்கிறது.

    தலைவர் அவர்களே, ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் தந்தையான பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஒருங்கிணைந்த மனிதநேயம் அதாவது Integral Humanism. அதாவது சுயத்தின் விரிவாக்கம், தனிநபரிடமிருந்து சமூகம் வரை வளர்ச்சியும் விரிவாக்கமும் அடைதல். Expansion of the self, moving from individual to the society, the nation and entire humanity. இந்த சிந்தனை அந்த்யோதயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த்யோதயா என்றால் Where no one is left behind என்று பொருள்.

    இந்த உணர்வுடன், இந்தியா இன்று ஒருங்கிணைந்த, சமமான வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக, அனைவரையும் தொடுவதாக, அனைத்து இடங்களிலும், அனைவருக்கு ஊட்டமளிப்பதாகவும் இருக்க வேண்டும், இதுதான் எங்கள் முன்னுரிமை.

    கடந்த ஏழு ஆண்டுகளில், 43 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் இதுவரை அந்த வசதி இல்லாமல் இருந்தார்கள். இன்று இவர்களுல் 36 கோடி மக்களுக்கு காப்பீட்டு வசதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னால் இவர்கள் இதைப்பற்றி சிந்தித்து கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    50 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்தியா அவர்களை தரமான சுகாதார சேவையுடன் இணைத்துள்ளது. இந்தியா 3 கோடி பக்கா வீடுகள் கட்டி, வீடற்றவர்களை வீட்டு உரிமையாளர்களாக ஆக்கியுள்ளது.

    தலைவர் அவர்களே, மாசுபட்ட நீர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மற்றும் குறிப்பாக ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும். இந்தியாவில் இந்த சவாலை சமாளிக்க, 170 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான தண்ணீரை வழங்குவதற்காக நாங்கள் ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்துகிறோம்.

    உலகின் பெரிய பெரிய அமைப்புகள், எந்த நாட்டின் வளர்ச்சிக்கும், அதன் குடிமக்களுக்கு நிலம் மற்றும் வீட்டின் சொத்து உரிமைகள், அதாவது உரிமையின் பத்திரங்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை அங்கீகரித்துள்ளன. உலகின் பெரிய நாடுகளில், அதிக எண்ணிக்கையில் நிலம் மற்றும் வீடுகளின் சொத்து உரிமை இல்லாத மக்கள் உள்ளனர்.

    pm modi in un speech
    pm modi in un speech

    இன்று இந்தியாவின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன்கள் மூலமாக வரைபடங்கள் உருவாக்கி, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வீடு மற்றும் நிலத்தின் டிஜிட்டல் பதிவுகளை வழங்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

    இந்த டிஜிட்டல் பதிவு, சொத்து தகராறுகளைக் குறைக்கும் அதே வேளையில், மக்கள் கடன் – வங்கிக் கடன்களுக்கான வாங்குவதை அதிகரிக்க உதவிசெய்கிறது.

    தலைவர் அவர்களே, இன்று உலகில் ஒவ்வொரு ஆறாவது நபரும் ஒரு இந்தியர். இந்தியர்கள் முன்னேறும்போது, ​​உலகின் வளர்ச்சியும் வேகமடைகிறது.

    When India grows, the world grows. When India reforms, the world transforms. அதாவது இந்தியா வளரும் போது உலகம் வளரும். இந்தியா சீர்திருத்தும்போது, ​​உலகம் மாறும்.

    இந்தியாவில் நடக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் உலகிற்கு நிறைய உதவ முடியும். எங்கள் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் அவற்றின் குறைந்த விலை ஆகிய இரண்டும் விலைமதிப்பில்லாதது.

    இன்று, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 350 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் எங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI – United Payment Interface) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவின் தடுப்பூசி விநியோக தளமான CO-WIN, ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கு டிஜிட்டல் ஆதரவை வழங்குகிறது.

    தலைவர் அவர்களே, சேவையே மிகச்சிறந்த அறம். இத்தகைய அறநெறியில் வாழும் இந்தியா: குறைந்த வளங்கள் இருந்தாலும், தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தியில் மும்முரமாக உள்ளது.

    நான் UNGAவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், இந்தியா உலகின் முதல், உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் வழங்கப்படலாம்.

    மற்றொரு m-RNA தடுப்பூசி அதன் வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்திய விஞ்ஞானிகளும் கொரோனாவுக்கான நாசி தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மனிதகுலத்தின் மீதான அதன் பொறுப்பை உணர்ந்து, இந்தியா மீண்டும் தேவையானவர்களுக்கு தடுப்பூசியை அளிக்க ஆரம்பித்துவிட்டது.

    உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களையும் நான் இன்று அழைக்கிறேன்- வாருங்கள், இந்தியாவில் தடுப்பூசி தயாரியுங்கள். Come, Make Vaccine in India.

    தலைவர் அவர்களே, மனித வாழ்வில், தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியம் என்பதை இன்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மாறிவரும் உலகில், ஜனநாயக மதிப்புகளுடன் கூடிய தொழில்நுட்பம், இதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள், எந்த நாட்டிலிருந்தாலும், எங்களது ஜனநாயக மதிப்புகள், மனிதநேய சேவையில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கிறது. மேலும் இந்த கொரோனா காலத்திலும் இதை நாங்கள் பார்த்தோம்.

    தலைவர் அவர்களே, உலகப் பொருளாதாரம் இன்னும் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒரு பாடத்தையும் கொரோனா பெருந்தொற்று உலகிற்கு அளித்துள்ளது. இதற்காக, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் விரிவாக்கம் அவசியம்.

    நமது தற்சார்பு இந்தியா பிரச்சாரம் இந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டது. உலகளாவிய தொழில்துறை பல்வகைப் படுத்தலுக்கான உலகின் ஜனநாயக மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா மாறி வருகிறது.

    இந்த பிரச்சாரத்தில், பொருளாதாரம் மற்றும் சூழலியல் ஆகிய இரண்டிலும் இந்தியா ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்தி யுள்ளது. பெரிய மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், காலநிலை நடவடிக்கைகளில் இந்தியாவின் முயற்சிகளைக் கண்டு நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள். 450 கிலோவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    தலைவர் அவர்களே, முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, ​​உலகிற்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்கு நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் பதிலளிக்க வேண்டும்? இன்று உலகம் முற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

    இந்த சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சியின் அடிப்படையாக மாற்ற வேண்டும்.

    அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்த, இந்தியா அனுபவ அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கிறது. நாங்கள் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான அடல் டிங்கரிங் ஆய்வகங்களைத் திறந்திருக்கிறோம். இன்குபேட்டர்களை உருவாக்கி இருக்கிறோம். ஒரு வலுவான தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில், இந்திய மாணவர்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவாக்கும் 75 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பப் போகிறது.

    தலைவர் அவர்களே, மறுபுறம், பிற்போக்கு சிந்தனையுடன், பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், பயங்கரவாதம் தங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த வேண்டாம்.

    எந்த நாடும் அங்குள்ள நுட்பமான சூழ்நிலையை தன் சுயநலத்திற்காக ஒரு கருவியாக எந்த நாடும் பயன்படுத்த முயலவில்லை என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள், சிறுபான்மையினருக்கு உதவி தேவை, இதில் நாம் நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

    தலைவர் அவர்களே, நமது பெருங்கடல்களும் நமது பொதுவான பாரம்பரியம் ஆகும். அதனால் தான் நாம் கடல் வளங்களை பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், துஷ்பிரயோகம் அல்ல. நமது பெருங்கடல்களும் சர்வதேச வர்த்தகத்தின் வாழ்க்கை வரிசையாகும். விரிவாக்கம் மற்றும் விலக்குதல் என்ற போட்டியிலிருந்து நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

    Rule-based world order அதாவது விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கை வலுப்படுத்த, சர்வதேச சமூகம் ஒற்றுமையாக பேச வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகித்தபோது ஏற்பட்ட பரந்த ஒருமித்த கருத்து கடல் பாதுகாப்பு விஷயத்தில் உலகை முன்னோக்கி காட்டுகிறது.

    தலைவர் அவர்களே, இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான ஆச்சார்யர் சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார் – கலாதி கிரமாத் கால ஏவ பலம் பிபாதி. அதாவது சரியான வேலையை சரியான நேரத்தில் செய்யாவிட்டால், நேரமே அந்த வேலையின் வெற்றியை அழிக்கிறது.

    ஐக்கிய நாடுகள் சபை தன்னைப் பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால், அது அதன் செயல்திறனை மேம்படுத்த வேண்டும், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.

    ஐநாவில் இன்று பல வகையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த கேள்விகளை காலநிலை நெருக்கடியில், கோவிட் காலத்தில் பார்த்தோம். உலகின் பல பகுதிகளில் ப்ராக்ஸி போர்கள் நடந்து வருகின்றன – பயங்கரவாதம் மற்றும் ஆப்கானிஸ்தான் நெருக்கடி இந்த கேள்விகளை ஆழப்படுத்தியுள்ளது. COVIDஇன் தோற்றம் மற்றும் வணிக தரவரிசைகளை எளிதாக்குதல், உலகளாவிய நிர்வாக நிறுவனங்கள் பல தசாப்த கால உழைப்பில் கட்டப்பட்ட நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளன.

    உலகளாவிய ஒழுங்கு, உலகளாவிய சட்டங்கள் மற்றும் உலகளாவிய மதிப்புகளைப் பாதுகாக்க நாம் தொடர்ந்து ஐ.நா.வை வலுப்படுத்துவது அவசியம். நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளுடன் எனது உரையை முடிக்கிறேன்.

    ஷுபோ கோர்மோ-போதே / தோரோ நிர்போயோ கான், ஷோப் டர்போல் சோன்ஷோய் / ஹோக் ஒபோசன்.

    அதாவது, உங்களின் சுபமான செயலில் பயமின்றி முன்னேறுங்கள். அனைத்து பலவீனங்களும் சந்தேகங்களும் நீங்கும்.

    இந்த செய்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்றைய சூழலில் பொருத்தமானது மற்றும் பொறுப்புள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பொருத்தமானது. நான் நம்புகிறேன், நம் அனைவரின் முயற்சிகளும், உலகில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அதிகரிக்கும், உலகத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், வளமாகவும் மாற்றும்.

    இந்த வாழ்த்துக்களுடன், மிக்க நன்றி… வணக்கம் !

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    6 − 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,023FansLike
    389FollowersFollow
    84FollowersFollow
    0FollowersFollow
    4,766FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக