ஐ.பி.எல் 2021 – புதன்கிழமை – 29.09.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று (29.09.2021) துபாயில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. பெநளூர் அணி டாஸ் வென்றது. ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்யச் சொன்னது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ், யசஸ்வீ ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். அணி 77 ரன் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் அவுட்டானார். பன்னிரெண்டாவது ஊவரின் முதல் பந்தில் 58 ரன்னுக்கு லூயிஸ் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 100. அதன் பிறகு பிட்சைப் பார்வையிட வந்தவர்கள் போல வந்தார்கள்; போனார்கள்.
விளைவு அணி 20 ஓவரில் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெங்களூரு அணியில் முதல் ஐந்து பேட்ஸ்மென்களும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். எனவே நாம் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து ராஜஸ்தான் மட்டையாளர்களும் பந்தைத் தூக்கியடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.
பெங்களூரு அணிக்கு 150 ரன் கள் எடுப்பது அல்வா சாப்பிடுவது போல. ஆரம்பத்தில் பெங்களூர் அணியின் ரன் ரேட் அதிகமிருந்தது. ஆனால் நடு ஓவர்களில் கொஞ்சம் குறைந்தது. பதினாறாவது ஓவர் முடிவில் ஸ்ரீகர் பரத் (44) அவுட்டானார். அடுத்த ஓவரில் ஆறு பந்துகளையும் மேக்ஸ்வெல் ஆடினார். முதல் பந்து 6; இரண்டாவது 2 ரன்; மூன்றாவது 4; நாலாவது பந்து 2; ஐந்தாவது பந்து 4; ஆறாவது பந்து 4 என அடித்தார். மேட்ச் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 17ஆவது ஓவரில் ஒரு ரன் எடுக்கவேண்டியிருந்தது. டிவில்லியர்ஸ் நாலு அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
இப்போது 14 புள்ளிகளுடன் பெங்களூர் மூன்றாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளது.