ஒவ்வொரு முகவருக்கும் தனித்தனி மின்னணு முகவரி குறியீடு! மத்திய அரசு திட்டம்!

aadhar
aadhar

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக உறுதிப்படுத்த முடியும். இந்த குறியீட்டை வைத்து சொத்து வரியை சுலபமாக செலுத்துவது முதல் இணையவழியில் பொருட்களை வாங்குவது வரை பயன் படுத்தலாம்.

இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் எந்த ஒரு முகவரி யையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆதார் எண்ணைப் போல ஒவ்வொரு தனிநபரின் குடியிருப்பு மற்றும் அலுவலக முகவரிக்கும் தனித்தனி குறியீடு வழங்கப்படும். உதாரணமாக அடுக்குமாடி குடி யிருப்பில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் நிரந்தரமான தனித்தனி குறியீடு வழங்கப்படும்.

இந்தக் குறியீடு சரக்கு போக்குவரத்து மற்றும் மின்னணு வர்த்தக தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் விநியோக சேவைகள் எளிதாக இருக்கும். மோசடிகளை தடுக்கவும் முடியும்.

மேலும் வங்கிகள், காப்பீடு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வர்த்தக துறையினர் வாடிக்கையாளரின் முகவரியை (கேஒய்சி) சுலபமாக இணைய வழியில் சரிபார்க்க டிஏசி உதவியாக இருக்கும்.

அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும் விநியோக சேவையை எளிமையாக்கவும் டிஏசி உதவியாக இருக்கும்.

குறிப்பாக சொத்து வரி விதிப்பு, அவசரகால உதவி, பேரிடர் நிர்வாகம், தேர்தல் நிர்வாகம், கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் நிர்வாகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, புகார்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட சேவைகளை திறம்பட நிர்வகிக்க இந்த டிஏசி பேருதவியாக இருக்கும். இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories