இந்திய கடலோர காவல் படையில் பணி!

Published:

nevy
nevy

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்ட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கடலோர காவல் படை (Indian Coast Guard)
மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஓட்டுநர் உள்ளிட்ட பகிளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 19

கல்வித் தகுதி :
அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு, பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஐடிஐ அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணியிடத்திற்கு கனரக, இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இப்பணிகளில் சில வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27- 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஊதியம் : ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.19,900 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.indiancoastguard.gov.in/ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related articles

Recent articles

spot_img