வீக்கமும் ரணமும் குணமாக…
காட்டாமணக்கின் இலையையும் வேரையும் அரைத்து விக்கங் களுக்குப் பற்றுப்போடலாம். வாய்புண்ணுக்கு இதன் பாலைச் சேகரித்துக் கொப்பளிப்பதுண்டு. காலை, மாலை இருவேளையும் இரண்டு மூன்று தினங்கள் கொப்பளிக்க வேண்டும் பாலை வெளி ரணங்களுக்குப் போட்டு வருவதன் மூலம் குணம் பெறலாம்.
நீண்டகால வீக்கங்களுக்கும் நீர் வடியும் புண்களுக்கும் நன்னாரி வேரை நீர் விட்டுக் களிம்பு போவ் அரைத்துப் புண்களைக் கழுவுவதற்கும் புண்களை ஆற்றுவதற்கும் உபயோகிக்கலாம்.
பிரமதண்டுச் செடியை ஓடித்தால் வெளிப்படும் மஞ்சள் நிறமுள்ள பாலை சீழ் பிடித்த இரணங்களில் வெளிப்பிரயோகமாகப் போட்டு வர வெகு சீக்கிரம் புண்கள் ஆறி சுகமாகும். வெட்டுக் காயங்களுக்கும்
இதைப் பயன்படுத்தலாம். சுண்ணாம்பைச் சம அளவு தேனுடன் கலந்து நன்றாகக் குழைத்து அடிபட்ட இடத்தில் தடவினால் காயம் விரைவில் ஆறிவிடும். சீழும்
பிடிக்காது.
உடம்பில் அடிபட்டு ஊமைக்காயமோ அல்லது வீக்கமோ ஏற்பட்டால் உடனே வெத்நீர் ஒற்றடம் கொடுத்து. பிறகு தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி சூடு பொறுக்க வீக்கத்தில் மேல் தடவி வர குணம் தெரியும்,
வீக்கம் சரியாக…
முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து விக்கங்களுக்கும், வாயு தங்கிய இடங்களுக்கும் பற்று போடலாம். ஆனால், நோய் இலேசாக இருக்கும் போது பற்று போட்டால் புண்ணாகி விடும். கோவை இலையை கட்டி, வீக்கம், மூலவியாதி முதலியவற்றுக்கு சுட்டுவதால் பிணி நீங்கும். கோவைக் கட்டியின் வேர்ப்பட்டை வாந்தி பேதியை கண்டிக்கும்.
வீரிய விருத்திக்கு…
முருங்கை விதை. முருங்கைப் பிசிள், வெங்காய விதை, நீர் முள்ளி விதை, நாயுருவி விதை வகைக்கு 40 கிராம் எடுத்து பசும்பால் விட்டரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு பசும்பால் பருகி வர தாது கட்டும், வீரிய விருத்தி ஏற்பட்டு போக சக்தி அதிகரிக்கும்.
முருங்கைக்கீரையையும் முருங்கைப் பூவையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தாது விருத்தியும், இரத்த சுத்தமும் ஏற்படும்.
கசகசா, வால் மிளகு. பாதாம் பருப்பு, கற்கண்டு சம அளவு எடுத்து இடித்து தேன் போதுமான அளவு சேர்த்து, லேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு, சுண்டைக்காயளவு சாப்பிட்டு பால் குடித்து வர வீரிய விருத்தியும் உடலுறவில் பலமும் ஏற்படும்.
வெட்டை நோயா?
சீரகம். வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்து நகக்கி கொட்டைப் பாக்களவு பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட மூன்றே நாள்களில் குணமாகும். அந்த நாள்களில் புளி, காரம் சேர்க்கக் கூடாது போகமும் கூடாது.
வெள்ளை வெட்டை நோய்களுக்கு செம்பருத்திப் பூக்களை காம்பைக் கிள்ளி விட்டு வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க நான்கைந்து வாரங்களில் நல்வ குனம் தெரியும்.
வெள்ளெருக்கு இலைகளைப் பறித்து மூன்று மிளகு வைத்து அரைத்து கண்டைக்காயளவு பசும்பாவில் கலந்து மூன்று நாள்கள் சாப்பிட வெள்ளை, வெட்டை நோய் நீங்கும். புளி. கடுகு அறவே நீக்க வேண்டும்.
வெறிநாய்க் கடிக்கு…
மணத்தக்காளி இலைகளை இடித்து சாறு பிழிந்து அரைக்கால் லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் உள்ளுக்கு மூன்று நாள்கள் கொடுக்கவும் அதே இலையை கசக்கி கடித்த இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு கட்டு போடவும். ஆறுநாள்களுக்கு குளிக்கக்கூடாது. உப்பு, புளி. கடுகு, நல்லெண்ணெய் தவிர்க்க வேண்டும். தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டிய அவசியம் இல்லை.