
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.
அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இந்நிறுவனம்.
இந்த சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் PAC-MAN எடிஷன் என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனைக் கொண்டு வந்துள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் PAC-MAN எடிஷன் சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய பெரிய விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனத்தின் சிப்செட் வசதி கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயனர்களுக்கு தகுந்தபடி புதுமையான அம்சங்கள் மற்றும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
PAC-MAN ஐ விளையாட்டு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். அந்த விளையாட்டுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் சுருக்கமாக சுறவேண்டும் என்றால் அந்த கேம் விளையாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதாவது அந்த கேமில் உள்ள pellet munching, ghost evading, wacca-wacca-ing கேரக்டரைக் கொண்டு வர முயற்சித்துள்ளது இந்நிறுவனம்.
இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 2 அம்சங்கள் புதுபிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் PAC-MAN சாதனம் பொழுதுபோக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றே கூறலாம்.
எளிமையாகச் சொன்னால், OnePlus Nord 2 x PAC-MAN எடிஷன் மிகவும் வேகமானது, மென்மையானது மற்றும் தனித்துமானது என்றே கூறலாம்.
OnePlus Nord 2 x PAC-MAN எடிஷன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புற பேனலைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் PAC-MAN கேம் விளையாட இது ஒரு சிறந்த சாதனம் ஆகும். கண்டிப்பாக இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதுவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் PAC-MAN எடிஷன் ஸ்மார்ட்போன் கிளாசிக் கேம் அனைத்தையும் பேக் செய்கிறது. அதேபோல் இந்த சாதனம் PAC-MAN உடன் OxygenOS UI ஐ மாற்றியமைத்துள்ளது.
குறிப்பாக தரமான அம்சங்கள் மற்றும் கேமிங் வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.
.