ராணுவத்தை வைத்து ராகுல் அரசியல்; சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு ஆதாரம் கேட்டு அவமானப் படுத்தியவர்தானே!: கிரண் ரிஜுஜு காட்டம்!

Published:

புது தில்லி:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தங்களது அமைப்பை ஒப்பிட்டு பேசியதாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்து, மோகன் பாகவத்திற்கு தனது கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரும் அருணாச்சல் பிரதேஷ் எம்.பி.யுமான கிரண் ரிஜுஜு தனது டிவிட்டர் பதிவில் ராகுலை சாடியுள்ளார். நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்தானே ராகுல் காந்தி என்று கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் முஜாஃபர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களான நாம் ஒரு ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. நாட்டிற்கு தேவை ஏற்பட்டால், நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால், வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு அல்லது ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நாம் மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும். இது நமது திறமை” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குறித்து பெருமிதமாகக் கூறினார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதற்கு ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராணுவத்தை அவமானப் படுத்திப் பேசியுள்ளார் என்று டிவிட்டரில் பதிவிட்டார். இதை அடுத்து இது ஒரு சர்ச்சையானது. இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் அரசுத் தரப்பில் இருந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் “இந்திய ராணுவம் மரியாதைக்கு உரியது. நெருக்கடி நிலைக் காலங்களில், (காங்கிரஸின் நெருக்கடி நிலைக் காலம் அல்ல) ஒவ்வொரும் ராணுவத்துக்கு பக்கபலமாக நிற்கவேண்டும். பாகவத் சொன்னது இதுதான். பொதுவாக ராணுவத்தை தயார் செய்ய ஆறு முதல் ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால் அரசியல் சாசனம் அனுமதித்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டர்கள் அதற்கு பங்களிக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்.” என்றுதான் அவர் பேசியதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், “இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைக்கு (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) ஆதாரம் கேட்டது யார்? அரசியல் நோக்கத்திற்காக இந்திய ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, மத அடிப்படையில் ராணுவ வீர்ர்களை கணக்கெடுத்து, ராணுவத்தை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் ராணுவம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது.” என்றார் அவர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img