காஷ்மீரில் ரூ20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி..

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக இன்று காஷ்மீர் சென்றார். அவருக்கு கவர்னர் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்ட நாளை முன்னிட்டு இன்று காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி அங்கு புதிய சுரங்கப்பாதை துவக்கம், 500 கிலோவாட் சோலார் எரிசக்தி திட்டம் துவக்கம், இ சாலை துவக்கம், புதிய அணை நீர்ப்பாசன திட்டம் , ஹை ட்ரோ எலக்ட்ரிக் திட்டம் , டில்லி அமிர்தசரஸ் கத்ரா சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கம் என ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காஷ்மீர் சம்பா மாவட்டம் பாலியில் நடந்த கிராமசபை கூட்ட விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

இன்றைய திட்டத்தின் மூலம் காஷ்மீர் வளர்ச்சி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த பாலி கிராம பஞ்சாயத்து கார்பன் இல்லாத பஞ்சாயத்தாக நாட்டிலேயே விளங்குகிறது. இந்த நாட்டிற்கே காஷ்மீர் முன்மாதிரியாக விளங்க துவங்கி உள்ளது. புதிய சட்டங்கள் மூலம் அனைவருக்கும் அதிகாரம் என்ற நிலையை உருவாக்கி உள்ளேன். ஏழைகள், பெண்கள், தலித்துகள் பயன் பெற்றுள்ளனர். அம்பேத்கரின் கனவுகள் நிறைவேற்றப்படுகின்றன.

அனைத்து நிர்வாகத்திலும் பெண்கள் இடம்பெற வேண்டும் . பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவோம். பஞ்சாயத்துகளே ஜனநாயக நாட்டின் முதுகெலும்பு. கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் 17 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 32 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியாளர்களால் காஷ்மீர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் புதிய வரலாறு படைத்துள்ளோம்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

காஷ்மீரில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தி பெருகி உள்ளது. ஜனநாயம் , வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக காஷ்மீர் விளங்குகிறது. புதிய காஷ்மீரை உருவாக்குவோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்டவைக்கே முக்கியத்துவம் வழங்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tamil News large 3014835 - 2026
IMG 20220424 WA0088 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories