காஷ்மீரில் 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொலை..

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் மற்றும் அம்ரீனின் உறவினரான 10 வயது மருமகன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அம்ரீன் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அம்ரீனின் உறவினரான சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

images 24 1 - 2026
709092 jkapft - 2026

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுண்ட் கிராமத்திற்குள் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகளை, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றனர். இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று அவந்திபோரா பகுதியிலும் பயங்கரவாதிகள் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் படுகொலையில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதன்பின்பு அவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், அவர்கள் ஷாகித் முஷ்டாக் பட் மற்றும் பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் உத்தரவின் பேரில் அவர்கள் அம்ரீனை சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. கூறும்போது, தொலைக்காட்சி நடிகை அம்ரீன் கொலை வழக்கில் 24 மணிநேரத்தில் தீர்வு காணப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 3 ஜெய்ஷ் இ முகமது மற்றும் 7 லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் என 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories