ஐதராபாத்-சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது..

Published:

ஐதராபாத்தில் சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

719105 hyderabad teen gang raped 1 - 2026

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கடந்த 28-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 17 வயது சிறுமி விடு திரும்பியுள்ளார். விடுதியில் இருந்து வெளியே வந்த அந்த சிறுமியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி சிறுவர்கள் உள்பட 6 பேர் சிவப்பு நிற ‘பென்ஸ்’ சொகுசு காரில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அந்த 6 பேரும் அந்த சிறுமியை பஞ்சாரா கில்ஸ் பகுதியில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அந்த 6 பேரும் சிறுமியை பென்ஸ் சொகுசு காரில் இருந்து மாற்றி இன்னோவா காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அந்த 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றச்சாட்டி இருந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த வழக்கில் சதுதீன் மாலிக், மற்றும் சிறுவர்கள் என 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முக்கிய நபரின் மகனும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 6-வது நபராக எம்.எல்.ஏ. மகனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி எம்.எல்.ஏ. மகனை போலீசார் தற்போது கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகன் சிறுவன் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி சொகுசு காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img