மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம்..

டெல்லியில்,வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் இச்சம்பவம் குறித்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் கராவல் நகரின் துக்மீர்பூர் நகரில் வசித்து வரும் தம்பதி ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் சப்னா நிற்க வைத்துள்ளார். வெயில் அதிகரித்து, அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளது. சற்று நேரம் அழுதுள்ளது. சிறுமியின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். பின்னர் சிறுமியை கீழே கொண்டு வந்தனர். இதுபற்றி சுனில் கூறும்போது, ஒவ்வொரு சிறு விசயத்திற்காகவும் தனது குழந்தைகளை அவர்களின் தாயார், அடித்து வருகிறார். இயற்கையிலேயே அதிக கோபக்கார பெண்மணி. அவர் அடிக்கும்போது நாங்கள் யாராவது தடுக்க சென்றால், அவர்கள் எங்களுடைய குழந்தைகள். அவர்கள் மீது எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என அந்த தாய் கூறி விடுவார். இதற்கு முன்பு அவர் இப்படி இருந்தது இல்லை. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே இப்படி நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் தகராறில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர் அவர் என சிறுமியின் அத்தை பூஜா கூறியுள்ளார். சிறுமியிடன் மட்டுமின்றி, மகனிடமும் இதுபோன்று நடந்து கொள்வார். அதனை நாங்கள் தடுக்க சென்றால், கூடுதலாக அவர்களுக்கு அடி கிடைக்கும். அதனால், அவர் என்ன வேண்டுமென்றாலும் கூறி விட்டு போகட்டும் என நாங்கள் விட்டு விடுவோம் என கூறியுள்ளார். இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் கூறும்போது, குழந்தைகளின் அழுகை சத்தம் அந்த வீட்டில் இருந்து எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் கூட, அவரது மகனை ஆடைகள் இன்றி வெற்றுடலுடன் நிற்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதன்பின்னர், பக்கத்தில் வசிப்பவர்கள் சென்று சிறுவனுக்கு ஆடைகளை கொடுத்தனர் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 52 - 2026
727170 dfyod - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories