கொள்கை முடிவுகள் எடுக்க மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் அனுமதி

இந்தியா

jitan-ram-manjhi பாட்னா: பீகாரில் அரசியல் சிக்கலில் உள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் அரசு, கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கொள்கை முடிவுகள் எதையும் எடுப்பதில் மாஞ்சி அரசுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அந்த உத்தரவை விலக்கிக் கொண்டுள்ளது நீதிமன்றம். மேலும், மாஞ்சி அரசு எத்தகைய கொள்கை முடிவுகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்த பிறகே அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.