38 ஆண்டுகளுக்கு பின் பனிச்சரிவில் ராணுவ வீரர் மீட்பு..

images 2022 08 18T103247.067 - 2026
images 2022 08 18T103234.377 - 2026

38 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அவரது உடலுடன் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரசேகர் ஹர்போலா என்ற அந்த வீரர், கடந்த 1984-ம் ஆண்டு தனது சக வீரர்கள் 19 பேருடன் அங்கு ரோந்து சென்றபோது ஒரு பனிச்சரிவில் சிக்கினார். அதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுடன் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அது யாருடையது என்று தெரியவில்லை. சந்திரசேகர் ஹர்போலாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது. நேற்று அவரது உடல், லே நகருக்கு கொண்டுவரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்டுவானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சந்திரசேகர் ஹர்போலாவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர் அங்கு முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் கிடைத்திருப்பது தங்கள் துக்கத்தை கிளறிவிட்டிருந்தாலும், ஒருவிதத்தில் நிம்மதி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சியாச்சினில் ஒரு ராணுவ வீரரின் உடல் பல ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. துக்காராம் வி.பாட்டீல் என்ற இந்திய ராணுவ வீரரின் உடல், அவர் மாயமான 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2014-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சியாச்சின் பகுதி, உலகத்திலேயே உயரமான போர்க்களமாக உள்ளது. இந்த கொடும் பனிப்பகுதியை பாதுகாக்கும் முனைப்பில் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கு பரஸ்பர மோதலைவிட, பனிப்புயல்களாலும், பனிச்சரிவுகளாலும் இரு நாட்டு வீரர்களும் இறப்பதே அதிகம் என்பதுதான் விந்தையான சோகம். இங்கு கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெரும் பனிச்சரிவில் சிக்கி 129 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோன்ற விபத்தில் இந்திய தரப்பில் 2016-ம் ஆண்டில் 10 வீரர்களும், 2019-ம் ஆண்டில் 4 வீரர்களும் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories