பெங்களூர் விமானக் காட்சியில் பறந்து கொண்டிருந்த விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து

Published:

aero-india2015-planes-hits பெங்களூர்: பெங்களூர் யெலஹங்காவில் நடைபெறும் விமான சாகசக் கண்காட்சி ஏரோ இந்தியா 2015ல் வியாழக்கிழமை இன்று மாலை பறந்து கொண்டிருந்த இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றை ஒன்று உரசி விபத்துக்கு உள்ளானது. இதில், விமானத்தில் பறந்த 4 பேர் குழு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. செக் குடியரசில் இருந்து வந்திருந்த ஒரு குழு இந்த விபத்து நேரிட்ட விமானத்தில் இருந்தது. இந்த இரு விமானங்களின் இறக்கைகள் மோதி காக்பிட் பகுதி வரை ஒரு விமானம் பாதிப்பு அடைந்தது. இதில் இரு விமானங்களும் பின்னர் ஒருவாறு சமாளித்து தரையிறங்கின. விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் 66 வயது ராட்கா மக்கோவா என்ற விமானியும் மேலும் ஒருவரும் இருந்தனர். இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது.

Related articles

Recent articles

spot_img